ஏழு மொழிகளில் சரளமாக பேசி அசத்தும் சிறுமி (Video)

“ஆச்சரியமான மக்கள்” எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொஸ்கோவை சேர்ந்த Bella Devyatkina என்ற நான்கு வயது சிறுமி,  ஏழு  மொழிகளில் சரளமாக பேசி அவரது அபார ஆற்றலை காட்டி உள்ளார்.

குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரபு, ஆங்கிலம், ஸ்பானிஷ், சீனம், ரஷியன், பிரஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவதும், அந்த மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடன் பதில் அளிப்பதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அவர் அறிவிக்கப்பட்டால், $16,000 க்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த பரிசில்களை அவர் வெற்றி கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.


Screen Shot 2016-10-21 at 10.16.35 AM


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !