ஏழு சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்! – ஆசிரியருக்கு 10 வருட சிறை!

பிரித்தானியாவின் உத்தியோகப்பூர்வ நிரந்தர கடற்படை தளமொன்று பாரசீக வளைகுமா நாடான பஹ்ரைனில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யோர்க் இளவரசர் அன்ட்ரூ மற்றும் பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமட் அல் கலீஃபா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த திறப்பு விழா இடம்பெற்றது.

சவுதிய அரேபிய கரையோரப் பகுதியில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்ட குறித்த கடற்படை தளத்தில், மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களுக்கென 500 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை உறுதிபடுத்தி, சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாதச் செயற்பாடுகள் என்பவற்றை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் தனது கடற்படை பணிகளை விரிவுபடுத்தவுள்ளதாக பிரித்தானியா கடந்த 2014ஆம் ஆண்டு அறிவித்திருந்த நிலையில், அதற்கமையாக தற்போது இது அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !