Main Menu

ஏப்ரல் 21 தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் மத்திய வங்கியின் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.