ஏனோதானோ இடைத்தேர்தல் பணிகள்…! எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு..!
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஏனோதானோவென்று பணியாற்றுவதாக வந்த தகவல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டென்சன் ஆக்கியுள்ளது.
நடைபெற உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்லாமல் அந்தக் கட்சியின் அமைச்சர்கள் முதல் கிளைக்கழகச் செயலாளர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் எதிர்க்கட்சியினர் விளையாடும் mind கேமில் அதிமுகவின் தேர்தல் பணி மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. நான்கு தொகுதிகளிலும் திட்டமிட்டபடி எந்த பணியும் நடைபெறவில்லை என்பது தான் உளவுத்துறை முதலமைச்சருக்கு கொடுத்துள்ள ஷாக் ரிப்போர்ட்.
தேர்தல் செலவுக்கு என்று கொடுக்கப்படும் பணம் எதையும் அதிமுக பிரமுகர்கள் முழுவதுமாக செலவழிக்கக் இல்லை என்று கூறி எடப்பாடியை அதிர வைத்துள்ளது உளவுத்துறை. அமைச்சர்களும் கூட தாங்கள் செலவு செய்வதாக ஒப்புக் கொண்ட தொகையில் பாதியை கூட தற்போது வரை செலவு செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் திண்ணைப் பிரச்சாரம் என்பதுதான் அதிமுகவின் மிகப்பெரிய பிரம்மாஸ்திரம். இதுநாள் வரை நான்கு தொகுதிகள் அப்படி ஒரு நிகழ்வே அதிமுக சார்பில் நடைபெறவில்லை.
மேலும் வார்டு வாரியாக வாக்காளர்கள் பிரித்து அவர்கள் எந்த கட்சியினர் என்று அடையாளம் கண்டு இறுதி நேரத்தில் கொடுக்க வேண்டியது கொடுப்பதும் அதிமுகவின் பிராண்டட் வொர்க். அதனையும் கூட செய்வதில் அதிமுக பிரமுகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். இப்படி இடைத்தேர்தல் பணிகளில் ஏனோதானோவென்று அதிமுகவினர் இருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மிக முக்கியமான பணிகளுக்கு கட்சி பிரமுகர்களையும் அமைச்சர்களையும் நம்புவதற்கு பதில் அரசு அதிகாரிகளையும் போலீஸ் அதிகாரிகளின் எடப்பாடி நாடத் தொடங்கி உள்ளார். மிகவும் நெருக்கமாக உள்ள அரசு அதிகாரிகள் மூலம் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் மேற்பார்வையிடும் புதிய முயற்சியையும் எடப்பாடி துவங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அமைச்சர்களின் தினசரி தேர்தல் பணிகளை கிராஸ் செக் செய்வதற்கும் உளவுத் துறையில் தனி டீமே தற்போது செயல் படுவதாக கூறுகிறார்கள்.
இப்படி அதிமுகவில் ஏனோதானோவென்று இருக்கும் தேர்தல் பணிகளை அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைப்பது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் தெரியவரும்.