ஏக்கிய’ என்ற சொல்லுக்கு தமிழில் அர்த்தங்களில்லை – மஹிந்த அணி

‘ஏக்கிய’ என்ற பதத்திற்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் அர்த்தங்கள் இல்லை என மஹிந்த ஆதரவு அணி குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த அரசாங்கம் வடக்கு மக்களுக்கும், தெற்கு மக்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. புதிய அரசியல் யாப்பு என்று கூறுகின்றனர் ஆனால் அது சட்ட மூலம் மாத்திரமே.

‘ஏக்கிய’ என்ற பதத்திற்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் அர்த்தங்கள் இல்லை. தற்போது வடக்கு மக்களின் பிரதான பிரச்சினை பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதா எனக் கேட்கின்றேன்.

மஹிந்த அரசாங்கம் செய்த அபிவிருத்திகளே வடக்கில் நிலைத்து நிற்கின்றன. வடக்கில் 200 பாடசாலைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. சாவகச்சேரியில் வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் யாழ்.வைத்தியசாலையும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தாம் அனைத்தையும் அமைத்தாக தம்பட்டம் அடிக்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !