Main Menu

“எஸ்.பி.பி” என் ஆயுளையும் சேர்த்து வாழனும்“ ; நடிகை சரோஜா தேவி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற இறைவனிடம் வேண்டுவதாக நடிகை சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தெரிவித்த அவர், “என் ஆயுளையும் சேர்த்து அவருக்கு கொடு என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அவர் நல்லபடியாக குணமடைந்து மீண்டும் வந்து பாடணும் ரொம்ப வருஷம் பாடணும்” எனத் தெரிவித்துள்ளார்.