எழு பேர் விடுதலை விவகாரம் கருணை அடிபடையில் சிந்திக்க வேண்டும் – கமல்ஹாசன்

ஏழு பேர் விடுதலை தொடர்பில் சட்டத்திற்கு அப்பால் சென்று கருணை அடிபடையில் சிந்திக்க வேண்டும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழிவார்பேட்டையில் நேற்று (ஙாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “ பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் கருணை காட்ட வேண்டியவர்கள் கருணை காட்ட வேண்டும். 7 பேர் விடுதலை மட்டுமல்ல ஏழரை கோடி பேருக்கும் தற்போது விடுதலை தேவைப்படுகின்றது.

அதேநேரம், மதுவை ஒழிப்பதற்கு அரசு மட்டுமல்ல மக்களும் ஒத்துழைக்க வேண்டும்” எனக் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !