எல்லை துப்பாக்கி சூட்டு விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம்

சர்வதேச எல்லையில் இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல், நேற்று (சனிக்கிழமை) அழைப்பாணை விடுத்து, அவரிடம் நேரடியாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் எல்லையில் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இந்திய வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும், அது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது எனவும் பைசல் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில்  இந்தியாவின் அத்துமீறிய தாக்குதல்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்குக்கு முகமது பைசல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எல்லையில் நேற்று முன்தினம் இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாகிஸ்தானின் பிம்பர் பகுதியை சேர்ந்த முனாசா பிபி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !