Main Menu

எல்லை காத்த மாவீரன் வீரப்பன் !

மாவீரன் வீரப்பன் ஜனவரி18 1952 ம் ஆண்டு கோபிநத்தம் என்னும் கிராமத்தில் வன்னியர் குலத்தில் பிறந்தார்.
வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ??? – வில்லன் போல் சித்தரித்த விபசார ஊடகங்கள் சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி.

வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்டு நிலமும் பெற்று இன்றோடு பல ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப் பட்ட பெண்களும், இட்லரின் நாஜிப் படையை விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான ஆண்களும், பெண்களும், இன்றும் மவுன சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சித்திரவதைகளை செய்தவர்களும், செய்யத் தூண்டியவர்களும், இன்று பதவி மெத்தைகளிலும், அதிகார அரியணைகளிலும், அமர்ந்திருக்கிறார்கள்.

வீரப்பனால் பெயரைக் கூறி பத்திரிக்கை விற்பனையை பெருக்கியும், வீரப்பனுக்கு தருகிறேன் என்று கூறி, கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தவர்களும், அன்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு, நெருக்கமாக, கும்மியடித்துக் கொண்டு, ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு ஒத்து ஊதிக் கொண்டு உள்ளார்கள்.

வீரப்பனை கொன்று விட்டோம் என்ற மார்தட்டிக் கொண்டு, பல ஆண்டுகள் கழித்து, இன்றைய நிலைமை என்ன என்று பார்த்தால், வருத்தமும், ஏமாற்றமும், வீரப்பன் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.

வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ? தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு தைரியம் இருக்குமா ?

வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், வீரப்பன் என்ற ஒரு நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும், தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப் பட்டுத்தானே வருகின்றன ? இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில், மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில், மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சோளகர் தொட்டி படித்துப் பாருங்கள்… !

வீரப்பன் இருந்த காலத்தில், காட்டுக்குள் வந்து வேட்டையாட பயந்த மரக் கொள்ளையர்கள் வீரப்பன் இருந்த பக்கமே வரமாட்டார்கள் என்றும், வனத்துறையினர் மீது துளியும் பயம் இல்லை என்றும், வீரப்பன் என்றால் அவ்வளவு அச்சம் என்றும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி டிவியில் வந்ததும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த என்கவுண்டரில் முக்கியப் பங்கு வகித்த ஒரு ஆய்வாளர் யார் தெரியுமா ? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் வெள்ளைத் துரை. ஆறு ஆண்டுகளுக்கு முன், என்கவுண்டர் நடந்ததாக சொல்லப் படும் 18.10.2004ம் ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருக்கிறார்.

17.10.2004 அன்று இரவு, தன்னுடைய குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளோடு, தரைத் தளத்தில் வண்டி நிறுத்தும் இடம் அருகே வெள்ளைத் துரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது, அந்த குடியிருப்புக்கே தெரியும். மறுநாள் டிவியைப் பார்த்தால், வெள்ளைத் துரை போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

வீரம் என்பது என்ன தெரியுமா ? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ் கொடுப்பதல்ல. .. 34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம். கடற்கரையின் இருட்டில் உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக் குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல….news

வீரப்பன் இல்லாத நிலையில், இன்று கேரள எல்லையில், தொடர்ந்து சந்தன மரங்கள் கடத்தப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வீரப்பன் இருந்த வரை, யானைகளையும் வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, வனத்துறையினர் அஞ்சி நடுங்கியதாகவும், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர், மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.news

வீரப்பனுக்கு, உணவு கொடுத்தோம், உதவி செய்தோம் என்ற காரணத்துக்காக, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான மலைவாழ் மக்கள் கூட, இன்று வீரப்பன் இல்லாததை நினைத்து வருந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம். வனச் சொத்துக்களை அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம். வீரப்பன் வனச் சொத்துக்களை அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் வேதாந்தா குற்றவாளி இல்லையா ? அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா ? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா ?

இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?

வீரப்பன் என்ற மாவீரன் இல்லாததால் தமிழகம் இழந்ததே அதிகம். வீரப்பன் இருந்திருந்தால், வாலாட்டும் வாட்டாள் நாகராஜின் வாலை நறுக்கியிருப்பார்.

சந்தன வீரப்பன் பெயரால் வனத்துறை மேற்கொண்ட கற்பழிப்பு கொலை கொள்ளை

1992-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி, தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக்கூறி, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையின்போது அரங்கேற்றப்பட்ட அட்டூழியங்களுக்கு 2011 செப்டம்பர் 29-ல் தண்டனை கிடைத்திருக்கிறது. பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நியாயம் கிடைத்திருக்கிறது. காலம் கடந்து கிடைத்த தீர்ப்பு ,

இதற்காக அந்தக் கிராம மக்களும், மலைவாழ் அமைப்புகளும், இடதுசாரி இயக்கங்களும் தொடர்ந்து போராடியதால்தான் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, இப்போதாகிலும் நியாயம் கிடைத்திருக்கிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது உயிருடன் உள்ள 215 பேருமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதுடன், இவர்களில் 17 பேருக்கு அந்தக் கிராமப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தண்டனை வழங்கப்பட்டிருப்பது, இவர்கள் எந்த அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்பதை, இப்போதாவது உலகம் அறிந்துகொள்ள வழிகோலியிருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் பழங்குடியினர் மீது தாக்குதல், பாலியல் பலாத்காரம் போன்ற வன்கொடுமைகள் நடக்கவே செய்கின்றன. ஆனால், அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சிலராக மட்டுமே இருப்பார்கள். வாச்சாத்தி போன்று ஒரு கிராமம் முழுவதுமே பாதிக்கப்படுவது மிக அரிது.

மணக்கும் சந்தனக் கட்டைக்காக தமிழ்நாடு வனத்துறை நாறிப்போனதைப் போன்று இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது. கிராமத்தில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் வந்தது என்று கூறிக்கொண்டு, வனத்துறையினர் 155 பேர், காவல்துறையினர் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என்று 269 பேர் ஒரு மலைக் கிராமத்தில் புகுந்தனர். சந்தனக்கட்டை குறித்துத் தகவல் வந்ததைப்போல, அந்தக் கிராமத்தில் இருந்த ஆண்கள் அச்சத்தில் வெளியேறிவிட்டார்கள் என்ற தகவல் மட்டும் இவர்களுக்குக் கிடைக்காமலா இருந்திருக்கும்? ஆனாலும், அத்தனை பேரும் அந்தச் சிறிய கிராமத்தில் புகுந்து 90 பெண்கள், 15 முதியவர்கள், 28 குழந்தைகளை “சிறைப்பிடித்தனர்’. இதுவே வனத்துறைக்கு மிகப்பெரிய அவமானம். “”அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரக அலுவலர்கள் முறைகேடாக சந்தனக்கட்டையை வெட்டிக் கடத்திக் கொண்டிருந்தபோது, இவர்கள் இருவரும் எல்லை கடந்துபோய் மரம் வெட்டியதில் ஏற்பட்ட மோதல்தான் இந்த ரெய்டுக்கு காரணம்” என்று பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராமத்தின் பெருமாள் (75 வயது) இப்போதுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றால், சந்தனக்கடத்தல் வீரப்பனை யார் வளர்த்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வது எளிது.

கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் சோதனை நடத்தி, பெண்களைத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு வனத்துறை அதிகாரிகளின் “தொழில்போட்டி’ இருந்திருக்கிறது. இந்தக் கிராம மக்கள் சந்தனக்கட்டைகளை வெட்டினார்கள் என்பது வனத்துறையின் வாதமாக இருந்தாலும், அது உண்மையாகவே இருந்தாலும், இவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காகவும் கூலிக்காகவும் மரங்களை வெட்டிக் கொடுத்தவர்களாக இருந்திருப்பார்களேயொழிய, சந்தன மரங்களை விற்றுக் கொழித்தவர்கள் அல்ல என்பது சர்வநிச்சயம். இந்த உண்மை தெரிந்திருந்தும், இந்த மக்கள் மீது இத்தனை வன்மத்துடன், இத்தனை பேர் கும்பலாகச் சென்று வன்கொடுமை செய்கிறார்கள் என்றால், சந்தனமரத்தில் கிடைத்த லாபத்தின் பெருந்தொகை எவ்வளவாக இருந்திருக்கும்! சந்தன எண்ணெய்க் கூடத்தில் சந்தனக்கட்டைகள் தீப்பற்றி எரிந்துபோனதாகச் சொல்லப்படும்போது, இவை கணக்குக் காட்டப்படுவதற்காக வனத்துறையால் நாடகம் ஆடப்பட்டதோ என்று சந்தேகம் ஏற்படுவது நியாயம்தானே?

இந்தியாவின் மையப் பகுதியான தண்டேவாடாவிலும், தெலங்கானாவிலும் இவ்வாறு பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையின் விளைவுதான் இன்று மாவோயிஸ்ட் பிரச்னை. இந்திய அரசும், ராணுவமும்கூட அங்கே உள்ளே நுழைய முடியாத அளவுக்குப் பெரும்பிரச்னையாக மாவோயிஸ்ட் பிரச்னை உருவெடுக்கக் காரணம், இதுபோன்ற சில சம்பவங்களும், வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் சுயநலமுமேயாகும். ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய தீவிரவாத அமைப்புகள் தலையெடுக்கவில்லை. சில நேர்வுகளில் ஒரு சிலர் தீவிரவாதத்தில் இறங்கியிருந்தாலும்கூட அவர்கள் மிகச் சிலராகவும் அவர்களுக்கு மலைவாழ் மக்களின் ஆதரவு இல்லாமலும் போனதற்குக் காரணம், 19 ஆண்டுகள் ஆனாலும் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களாகத் தமிழகப் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த மக்களின் பொறுமைக்குத் தமிழகம் தலைவணங்க வேண்டும்.

சந்தன மரத்தின் பெயராலும், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் பெயராலும் வனத்துறையினரும் காவல்துறையினரும் பழங்குடியினர் மீது நடத்திய அத்துமீறல்கள் கொஞ்சமல்ல. வாச்சாத்தி கிராமம் வெளியில் தெரியவந்த மிகச் சில நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், வெளியில் வராத சோகங்கள் இன்னும் பல மலைக்கிராமங்களில் புதைந்து கிடக்கின்றன. அந்த அநியாயங்களுக்குத் தீர்ப்பு வழங்க, கலையாத சாட்சியாய் காத்து நிற்கிறது காடு. தாமதமானாலும்கூட நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கி வாச்சாத்தி கிராமத்துக்கு நியாயம் வழங்கி இருக்கிறது. “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்’ என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வீரப்பன் என்ற தமிழனை மானங்கெட்ட.. இந்திய தேசம் தவறாக சித்தரித்த இன்னும் ஒரு விடுதலை வீரன் முப்பது ஆண்டுகள் அஞ்ஞான வாசம் செய்த காவிய நாயகன் வீரப்பன்..

வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள் :-

1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவுகூறவேண்டும்.

2. வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்ட ஈடு தரவேண்டும்.

3. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்.

4. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.

5. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.

6. தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை,தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..!!

\\ வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்கள் தங்கள் காவல் தெய்வமாக வீரப்பனை பார்த்தார்கள்.

பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து வாழ்வு நடத்திய ஏழைகளின் பங்காளன் எனப்படும் இராபின் ஊட்டின் சாயலில் வீரப்பனின் நடவடிக்கைகள் இருந்ததாலும், சட்டவிரோத செயல்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்க சரணடைய போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டது. வீரப்பனின் மறைவுக்குப்பின் அளவுக்கு அதிகமாக செல்வங்களை சேமித்து வைத்து இருந்தார் என எந்த செய்தியும் இல்லாத அளவுக்கு அவர் உண்மையிலேயே ஏழைப்பங்காளனாக இருந்திருக்கின்றார். நக்கீரன் ஆசிரியர் பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார். இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் கவுதமன் அவர்களால் இயக்கப்பட்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. வீரப்பனின் தாக்கத்தால் தமிழக திரைப்படங்களில் பலவும் காட்டிற்குள் வில்லன் இருப்பதைப் போன்று சித்தரித்து வீரப்பனை ஞாபகம் செய்தன. விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்கள் வீரப்பனை காவல்துறை பிடிக்காதது குறித்தான நகைச்சுவையில் ஈடுபட்டார்கள். வீரப்பனின் மரணத்திற்கு பின்பே வெகுஜன மக்களுக்கு வீரப்பனின் மகிமை தெரிந்தது. இப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இணைத்து வீரப்பனை கொண்டாடுகின்றார்கள். அவர் சமாதிக்கு சென்று பல இயக்கங்கள் வீர வணக்கம் செய்கின்றன //

– வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், வீரப்பன் என்ற ஒரு நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும், தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப் பட்டுத்தானே வருகின்றன ? இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில், மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில், மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சோளகர் தொட்டி படித்துப் பாருங்கள்… !

வீரப்பன் இருந்த காலத்தில், காட்டுக்குள் வந்து வேட்டையாட பயந்த மரக் கொள்ளையர்கள் வீரப்பன் இருந்த பக்கமே வரமாட்டார்கள் என்றும், வனத்துறையினர் மீது துளியும் பயம் இல்லை என்றும், வீரப்பன் என்றால் அவ்வளவு அச்சம் என்றும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி டிவியில் வந்ததும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த என்கவுண்டரில் முக்கியப் பங்கு வகித்த ஒரு ஆய்வாளர் யார் தெரியுமா ? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் வெள்ளைத் துரை. ஆறு ஆண்டுகளுக்கு முன், என்கவுண்டர் நடந்ததாக சொல்லப் படும் 18.10.2004ம் ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருக்கிறார். 17.10.2004 அன்று இரவு, தன்னுடைய குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளோடு, தரைத் தளத்தில் வண்டி நிறுத்தும் இடம் அருகே வெள்ளைத் துரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது, அந்த குடியிருப்புக்கே தெரியும். மறுநாள் டிவியைப் பார்த்தால், வெள்ளைத் துரை போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

வீரம் என்பது என்ன தெரியுமா ? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ் கொடுப்பதல்ல. .. 34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம். கடற்கரையின் இருட்டில் உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக் குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல….

வீரப்பன் இல்லாத நிலையில், இன்று கேரள எல்லையில், தொடர்ந்து சந்தன மரங்கள் கடத்தப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வீரப்பன் இருந்த வரை, யானைகளையும் வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, வனத்துறையினர் அஞ்சி நடுங்கியதாகவும், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர், மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
வீரப்பனுக்கு, உணவு கொடுத்தோம், உதவி செய்தோம் என்ற காரணத்துக்காக, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான மலைவாழ் மக்கள் கூட, இன்று வீரப்பன் இல்லாததை நினைத்து வருந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம். வனச் சொத்துக்களை அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம். வீரப்பன் வனச் சொத்துக்களை அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் வேதாந்தா குற்றவாளி இல்லையா ? அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா ? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா ?

இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?

வீரப்பன் என்ற மாவீரன் இல்லாததால் தமிழகம் இழந்ததே அதிகம்.

ஒரு நாள் ஆள்வான் தமிழன் இந்த உலகை மறுபடியும் !!

https://youtu.be/YMSeKnH0HCU

https://youtu.be/nInBFkZIhik

https://youtu.be/0S2N38k7t8w

https://youtu.be/jH6TESG-WTk

EeLam MPK BoYs !!

பகிரவும்...