எர்டோகனின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயன்ற 1112 பேரை கைது செய்த உத்தரவு!

துருக்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தையிப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு இராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்த போதும், பொது மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி அந்த கிளர்ச்சியை முறியடித்திருந்தார்.

அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் என்பவரே இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு உடந்தையாக இருந்தார் என தையிப் எர்டோகன் குற்றம்சுமத்தியிருந்தார்.

இதனையடுத்து, அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை பொலிஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என 77 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது மத குரு குலேனுடன் தொடர்புடைய 1,112 பேரை கைது செய்ய துருக்கி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !