எரிவாயுவுக்கான விலைக்கட்டணத்தில் இன்றுமுதல் மாற்றம்

இன்று பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து எரிவாயுவுக்கான விலைக்கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் (ஜனவரி 1) 1.9 வீதத்தால் எரிவாயுவுக்கான கட்டணம் குறைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக மீண்டும் விலைக்குறைப்பைக் கண்டுள்ளது. ஆனால் இம்முறை 0.73 வீதம் எனும் மிக குறைந்த அளவே குறைக்கப்பட்டுள்ளது.
சமையலுக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு 0.3 வீதத்தாலும், சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு 0.5 வீதத்தாலும், வெப்பமூட்ட பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கான கட்டணத்தில் 0.8 வீதமும் குறைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், வரும் மார்ச் மாதமும் இதே கட்டணம் தொடர்ந்து, ஏப்ரல் முதல்நாளில் மீண்டும் விலைக்குறைப்பு ஏற்படும் என அறிய முடிகிறது. ஏப்ரலில் 1.91 வீதம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அறியமுடிகிறது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !