என் குட்டி செல்லம்! குழந்தைக்கு ஒரு கவிதை!

எதை எதையோ

சாதித்துவிடுகிறாய் நீ!

உன் ஒரே ஒரு அழுகையால்!

உன் அழுகையை ரசிப்பதற்கேனும்

அழவிடலாம் கொஞ்சநேரம்!

 

இப்பூவுலகில் உன்னைப் பார்த்தவுடன் முடிவெடுத்துவிட்டேன்,

இனி வாழப்போவது இந்தப் பூவுக்காகத்தான்!

எல்லா மொழிகளையும் மறந்துவிடுகிறேன்

உன் மழலை மொழியின் சில வார்த்தைகளில்!

தத்தி தத்தி விழுகிறாய்,

விழுந்த பின் சிரிக்கிறாய்,

பின் எழுகிறாய்!

உன்னிடமிருந்து உணர்ந்துகொண்டேன்,

விழுதலிலும், எழுதலிலும் இல்லை

சோகமும், சந்தோசமும்

எல்லாம் அவரவர் மனதினில்!« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !