எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி

அரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி நாள் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசத்தின் பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதிலும் இறையாண்மையை பாதுகாப்பதிலும் விமானப்படையின் திறனில் எவருக்கும் சந்தேகம் வேண்டாம்.

அரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கின்றோம். கடமைகளை நிறைவேற்றுவதில் எப்போதும்  முன்வரிசையில் இருப்போம்.

மரபுரீதியான போரில் நம்மை தோற்கடிக்க முடியாது என்பது எதிரிக்கே தெரியும்” எனக் கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !