எத்தியோப்பிய விமான விபத்து விசாரணைகளை தொடர்கிறது சீனா

போயிங் ரக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் எத்தியோப்பிய விமான விபத்துக்கான விசாரணைகளை தொடரவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் விமான போக்குவரத்து நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

போயிங் 737 விமானம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளாகி 5 மாதத்துக்குள் எத்தியோப்பிய நாட்டுக்கு சொந்தமான ‘போயிங் 737 மக்ஸ்-8’ விமானம், கடந்த 10 ஆம் திகதி கென்யா நோக்கி புறப்பட்டு சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் போயிங் ரக விமானங்கள் அனைத்தையும் சேவையிலிருந்து விலக்க சீனா தீர்மானித்தது. சீனா ஏயார்லைன்ஸ் தற்போது 96 போயிங் விமானங்களை விமான சேவையில் இருந்து நிறுத்தியுள்ளது. இது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் விமானங்களின் தரம் பற்றிய விசாரணைகளை விரைந்து தொடருமாறு  போயிங் நிறுவனத்துக்கு தனிப்பட்ட கடிதம் ஒன்றும் அனுப்ப பட்டுள்ளது என சீன விமான போக்குவரத்து நிர்வாகத்தின் பிரதி இயக்குனர் லி ஜியான் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பிய விமான விபத்தின் பின்னர் சீனா உட்பட பல நாடுகள் போயிங் ரக விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதோடு போயிங் நிறுவனமும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !