எத்தியோப்பிய விமான விபத்து: பிரான்ஸ் ஜனாதிபதி இரங்கல்

எத்தியோப்பிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது அஞ்சலியையும் இரங்கல்களையும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

எதியோப்பிய அரசுக்கு சொந்தமான Boeing 737 ரக விமானம், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை விபத்துக்குள்ளானது. அதில் பிரான்ஸ் நாட்டினர் உட்பட விமானத்தில் பயணித்த 157 பேர் உயிரிழந்தனர். தமது நாட்டினரும் உயிரிழந்துள்ள நிலையில் ஜனாதிபதி தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் விருப்பத்துக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் மொத்தமாக 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !