எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் : ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக இன்றும் ரசிகர்களை
சந்தித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் இன்று தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை அதிரடியாக
கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது:-
45ஆண்டுகாலமாக என்னை வாழவைத்தவர்கள் தமிழ் மக்கள். நான் பச்சை தமிழன்; என்னை தமிழனாக ஆக்கியவர்கள்
நீங்கள். திர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம். தமிழகத்தில் அரசியல் நிர்வாகம் சீர்கெட்டு
போய் உள்ளது.
அரசியல் குறித்த எனது பேச்சு இவ்வளவு சர்ச்சையாகும் என எதிர்ப்பார்க்கவில்லை. மு.க.ஸ்டாலின் ஒரு நல்ல
நிர்வாகி. சீமான் ஒரு போராளி. அவரது சில கருத்துகளை கேட்டு நான் பிரமித்து போயிருக்கிறேன். அன்புமணி
ராமதாஸ் நன்றாக படித்தவர். விவரம் தெரிந்தவர். தலித் மக்களுக்காக தொடர்ந்து உழைப்பவர் திருமாவளவன்.
போர் வரும் போது களத்தில் இறங்குவேன் இந்த மண்ணுக்காக; அதுவரை பொறுமை காப்போம்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !