எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை, திகதி அறிவிக்கப்படாமல் இன்று (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2019- 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு- செலவுத்திட்டம் தொடர்பிலான கூட்டத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே இரு அவைகளிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகின்றார்.

மேலும் ஜனவரி 31 ஆம் திகதி, வரவு- செலவுத்திட்டம் குறித்த கூட்டத்தொடர் ஆரம்பமாகிய முதல் ரபேல் விவகாரத்தை காரணம் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா உட்பட ஏனைய மசோதாவும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வரவு- செலவுத்திட்டத்தின் இறுதி நாளான இன்று, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மட்டும் எந்த விவாதமும் இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை, திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !