எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் மாணவர்களை தயார்படுத்துவதில் ஒன்ராறியோ பின்னிலை!

ஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் மாணவர்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்துவதில் பின்னடைவைக் கொண்டிருக்கக்கூடும் என்று, கல்வி தொடர்பில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட சமீபத்தைய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

கல்விக்கான ‘வழித்தடங்களும் வழித் தடைகளும்: வாழ்க்கை திட்டமிடல் மற்றும் தொழில் – ஒன்ராறியோ பாடசாலைகளுக்கான வழிகாட்டல்’vஎன்ற பெயரில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக ஒன்ராறியோ பாடசாலைகளுக்கான வழிகாட்டி ஆலோசகர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒன்ராறியோவில் 23 சதவீத ஆரம்பப் பாடசாலைகளில் மட்டுமே வழிகாட்டி ஆலோசகர்கள் உள்ளதாகவும், அவர்களில் அனேகர் பகுதிநேரமாக கடமையாற்றுவோர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாநிலத்தின் 98 சதவீத உயர்நிலை பாடசாலைகளில் வழிகாட்டி ஆலோசகர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள போதிலும், அவர்கள் ஒவ்வொருவரும் தலா சுமார் 375 மாணவர்களின் செயற்பாடகளுக்கு பொறுப்பானவர்களாக காணப்படுகின்றனர்.

ஒன்ராறியோவின் 1,254 கத்தோலிக்க மற்றும் அரச பாடசாலைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் பிரகாரம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் இடைநிலைப் பாடசாலைகளில் இருந்து உயர்நிலைப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு அனேகமாக ஆலோசனை உதவிகள் எவையும் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !