எட்மன்டன் பகுதியில் விபத்து – மூவர் படுகாயம்

எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

எட்மன்டனின் 50 வது நெடுஞ்சாலை பகுதியிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மூன்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !