Main Menu

எட்டு வீத மாணவர்களின் தொடர்புகள் இல்லை – கல்வியமைச்சர்

கொரோனா வீச்சினால், கடந்த 16 திகதியிலிருந்து பாடசாலைகள் மூடப்பட்டு, உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுக் காலத்தில், மாணவர்களிற்கு இணையவழிப் பாடங்கள் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் இடையிலான தொடர்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இந்த வீட்டிலிருந்த கல்விகற்கும் முறையில்  (Ecole à la maison), கடந்த இரண்டு வாரங்களாக, கிட்டத்தட்ட 8 சதவீத மாணவர்களின் தொடர்புகள் அற்றுப் போயுள்ளதாகக் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். இது பெரும் கவலையைத்தருவதாகவும், கல்வியென்பது அனைவரிற்கும் சமமானதாக இருக்வேண்டும் என்றும், ஒரு பகுதி மாணவர்கள் கல்வி கற்காகமல் இருப்பது தவறு என்றும் தெரிவித்துள்ள கல்வியமைச்சர், இந்த மாணவர்களின் வீடுகளிற்கு, நடந்த பாடங்கள் அனைத்தையும், அச்சுப் பிரதி எடுத்து அவர்களின் வீடுகளிற்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.