எடை கூடிய பெண்களுக்கான அழகிப்போட்டி!

எடை கூடிய பெண்களுக்கான அழகிப் போட்டி இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் போட்டித் தொடரில் கலந்து கொண்ட பெண்களின் தொகையை விட இம்முறை மிக அதிகமான பெண்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் அளவு 14 இற்கு அதிகமான பெண்கள் கலந்து கொள்ளுவதுடன் இப்போட்டிகள் மூன்று பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.

அவை, Miss, Mrs and Ms British Beauty Curve ஆகும்.

பிரித்தானியாவின் வாழும் பெண்களின் சராசரி அளவானது, கடந்த 1957 ஆம் அண்டு 12 ஆக இருந்ததாகவும் தற்போது 16 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !