எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை – ஊழியர்கள் மீது நடவடிக்கை!

எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

எச்.ஐ.வி. இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் இன்று பெலிஸ்நிலையத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வைத்தியர் இராதாகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) விருதுநகருக்கு விஜயமென்றையும் மேற்கொண்டார். இது தொடர்பில் அங்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரனிடம் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளருக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

“எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதே போல் அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. இரத்தம் செலுத்தப்பட்ட விடயத்தில் கவனக்குறைவாக இருந்த சாத்தூர், சிவகாசி அரசு வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”  என கூறினார்.

மேலும், இத்தகைய தவறுகள் மீண்டும் ஏற்படாமலிருக்க இரத்த சேமிப்புகளை மறுஆய்வு செய்ய வைத்தியத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இரத்த மாதிரிகள் முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே நோயாளிகளுக்கு செலுத்த அனுமதிக்கப்பட வேண்டுமென்றும், அதுவரை இரத்த வங்கிகளிலிருந்து இரத்தத்தை வைத்தியசாலைகளுக்கு அனுப்பக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் கட்ட விசாரணையின்போது  சிவகாசி அரசு வைத்தியசாலை இரத்த வங்கி ஊழியர் வளர்மதி,  இரத்த வங்கியின் ஆலோசகர், ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோர் ததற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே எச்.ஐ. வி.யுடன் மஞ்சள் காமாலை கலந்த இரத்தத்தை பெற்ற கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தீவிர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் அரசு வைத்தியசாலை வைத்தியர்கள் அந்த பெண்ணை விருதுநகர் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துருந்தனர். அங்கு அவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பெண் சாத்தூரிலுள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக சென்னை தாம்பரம் சாணடோரியத்தில் உள்ள சிறப்பு வைத்தியசாலையில் இருந்து மருந்து- மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும்,  பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற தனி மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் தீவிர சிகிச்சைகளை ஆரம்பித்துள்ளனர்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !