எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: இளைஞரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்!

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் விஷம் குடித்து உயிரிழந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகமுள்ளதாகவும், எனவே அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய பிற மாவட்ட அரசு வைத்தியர் குழுவை நியமிக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டுமென்றும் அவரது பெற்றோரால் கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரேத பரிசோதனை நடைபெறவில்லை என்பதுடன், இன்றும் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இளைஞரின் உடல் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சாத்தூர் அரசு வைத்தியசாலையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. நோய் தொற்றுள்ள இரத்தத்தை ஏற்றப்பட்டதால் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை அரசு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை, இரத்த வங்கியில் வழங்கிய இளைஞர் மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இளைஞனை இராமநாதபுரம் அரசு வைத்தியசாலையில் பெற்ரோர் அனுமதித்ததனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !