எங்கள் குழந்தையை காண காத்திருக்க முடியவில்லை – எமி ஜாக்சன்
தமது குழந்தையை காண காத்திருக்க முடியவில்லை என நடிகை எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
மதராஷபட்டிணம் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் George Panayioto என்பவரை காதலித்து வந்ததுடன் கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று அவரைநிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவர் தற்பொழுது கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் காதலரின் ஒளிப்படத்தை பகிர்ந்து இவ்விடயம் குறித்து பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “தாய்மையடைந்திருக்கும் இந்த தருணத்தை என் வீட்டு மாடியில் நின்று சத்தமாக சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. இந்த உலகத்தைவிட உன் மீதுதான் தூய்மையான நேர்மையான காதலுள்ளது. எங்கள் குழந்தையை பார்க்க காத்திருக்க முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.