எங்களைப் பற்றிய வதந்திகள் உண்மையில்லை – விக்னேஷ் சிவன்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சிறு வயதில் இருப்பது போன்ற காணொளியொன்று இணையத்தில் வைரலாகிவருகின்றது.
குறித்த காணொளியை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “எங்களைப் பற்றிய வதந்திகள் குறித்த செய்திகளை நாங்கள் பார்த்து வருகிறோம். நாங்கள் எந்தவித பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம்.
கேலி செய்யும் அனைவரின் கற்பனைகள் எங்களுக்கு வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது. இதனை காண கடவுள் எங்களுக்கு பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து உள்ளார் ” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கொரோனா தொற்று அச்சத்தில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டதாக நேற்று தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதனை விக்னேஷ் சிவன் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
…. And that’s how we see the news about us , the dear corona & ur wonderful designs with dead images of us !!
Hi we are alive , healthy and happy
God has given us enough strength & happiness to see the imagination of all you jokers and your silly jokes