ஊழல், மோசடி முறைப்பாடுகள் பொறுப்பேற்பு!

ஊழல், மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முறைப்பாடுகளை பொறுப்பேற்க ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவே விசாரணை இடம்பெற்றவுள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையிலான இந்த விசேட ஆணைக்குழு கடந்த ஜனவரி 17 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை மூன்று மாதங்களிலும், பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கை ஆறு மாதங்களிலும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !