ஊழல், மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக உயர்ந்தபட்ச தண்டனை – மைத்திரி அறிவிப்பு!

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு அரச சொத்துக்களுக்கும் உடமைகளுக்கும் இழப்பினை ஏற்படுத்தும் சகலருக்கும் அரசியல் கட்சி, பதவி வேறுபாடுகளின்றி உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதற்கான பின்னணி உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவை, தியசென்புர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் தவறிழைப்பதற்கு தான் வாய்ப்பளிக்கப்போதில்லை என்று தெரிவித்தார்.

தவறிழைக்கும் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக கட்சியின் தலைவர் என்றவகையில் தயக்கமின்றி செயற்படவுள்ளதாக வலியுறுத்திய ஜனாதிபதி , ஊழல், மோசடிகளின்றி மக்களை நேசிக்கும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க உறுதியுடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !