ஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை!
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார்.
அதை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால், மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறாமல் குறைந்தது ஒரு மாதமாவது சமூக இடைவெளியைப் பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லையென்றால், நிலைமை ஆபத்தாகலாம் எனத் தெரிவித்த அவர், இன்னும் இரண்டு வாரங்களுக்குள், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகலாமென்றும் எச்சரித்துள்ளார்.