ஊரடங்கு உத்தரவுள்ள பகுதிகளுக்கான அறிவிப்பு!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த பகுதிகளில் நாளை காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணிவரை திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது உருவாகியுள்ள கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...