ஊடக பிரதானிகளுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

விசேட அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஊடக பிரதானிகளுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி ஊடக பிரதானிகளுடனான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறவுள்ளது.

அவசர அமைச்சரவை கூட்டமொன்றிற்கு ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதன்போது, உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆதரவை கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தை மீட்கும் வகையில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியிலும் ஜனாதிபதி ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !