ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் – யாழ். முதல்வர் கண்டனம்

ஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலிஸாரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதென யாழ்.மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியிருப்பது ஊடக சுதந்திரம் தொடர்பாக அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் ஊடகச் சேவையை செய்து வருகின்ற இவ்வாறான பல ஊடகவியலாளர்களின் மீதும் ஊடகங்களின் மீதும் ஊடக சுதந்திரத்தை மதிக்காது அச்சுறுத்துவதும், தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

இதனை தொடரவிடாது தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்”’என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !