ஊடகவியலாளர்களை வெனிசுவேலா விடுவிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

வெனிசுவேலாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் மூவரையும் விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் தமது பணியை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரொமேனியாவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த வெளிவிவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி ஃபெடர்கா மொகெரினி தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வெனிசுவேலாவில் எவ்வித காரணங்களுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று ஊடகவியலாளர்களும், சாரதியும் விடுவிக்கப்பட வேண்டும்.

ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம் உலகளாவிய ரீதியில் குரல் கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !