உள்ளூராட்சித் தேர்தல் மே மாதம் நடைபெறும்!- கே.பாண்டியராஜன்

தமிழகத்தில் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்கூட்டங்களுக்கு  மக்கள் சமூகமளிக்கடாட்டார்கள் என்ற காரணத்தினால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளுக்கு சென்று கூட்டங்களை நடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் தேர்தல் நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டமைக்கு தி.மு.க.வே காரணமெனவும் அ.தி.மு.க தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றதெனவும் கே.பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !