உலக வானொலி தினம் 2018

ஐக்கிய நாடுகள் சபையானது 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதியை உலக ரேடியோ தினமாக அறிவித்தது. இந்த நாளில் தான் 1946-ம் ஆண்டு முதல்முறையாக ஐக்கிய நாடுகள் ரேடியோ தொடங்கப்பட்டது. இந்த நாள் ரேடியோ மூலம் தகவல்கள் ஒலிப்பரப்பப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் முக்கிய கருத்தை மையமாக கொண்டு உலக முழுவதும் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு ரேடியோ-விளையாட்டு துறை இடையே உள்ள உறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

விளையாட்டு குறித்த செய்திகளை ஒலிப்பரப்பு செய்வதன் மூலம் மக்களிடையே சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மையை அதிகரிக்க முடியும். அதாவது பாரம்பரிய விளையாட்டுகளை ஒலிப்பரப்பு செய்வது பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தும். ஆண் மற்றும் பெண்கள் விளையாட்டை ஒலிப்பரப்புவது சமத்துவத்தை எடுத்துக்காட்டும்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட செய்தியில், ‘இன்று உலக ரேடியோ தினம். ரேடியோ மற்றும் விளையாட்டு இரண்டையும் கொண்டாடுவோம்’ என கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !