உலக வங்கியின் புதிய தலைவராக இவங்கா ட்ரம்ப் நியமனம்?

உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகளான இவங்கா ட்ரம்ப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்கமைய அவர் எதிர்வரும் 31ஆம் திகதி தமது பதவிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகவுள்ளார்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவங்கா ட்ரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், “குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தலைவர் பதவிக்காக பரிந்துரைகள் வந்துள்ளன.

தகுந்த நபரைத் தெரிவுசெய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.

இரண்டாவது உலகப்போரின் நிறைவில் ஆரம்பிக்கப்பட்ட உலக வங்கியில், அதன் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாகவே இருந்து வருகின்றனர்.

உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக விளங்குகிறது. இது ட்ரம்ப்ப், தனது சொந்த விருப்பின் பேரில் உலக வங்கியின் தலைவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !