Main Menu

உலக கிண்ண இறுதி போட்டி – மனைவி ஆட்டத்தை நேரில் காண செல்லும் கணவன்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. 3 வது ஆட்டம் நாளை நடக்கிறது.

இதற்கிடையே அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் டி20 உலக கிண்ண இறுதி போட்டியில் அவுஸ்திரேலியா – இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி 8 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க வீராங்கனையாக களம் இறங்கும் அலிசா ஹீலி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி ஆவார்.

சொந்த மண்ணில் உலக கிண்ண இறுதி போட்டியில் மனைவி விளையாட இருப்பதை ஸ்டார்க் நேரில் சென்று பார்வையிட ஆசைப்பட்டார். இதற்காக அணி நிர்வாகத்திடம் அனுமதி கோரினார். அணி நிர்வாகமும் அனுமதி வழங்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து அவுஸ்திரேலியா புறப்பட இருக்கிறார் மிட்செல் ஸ்டார்க்.