உலக அரசாங்க உச்சிமாநாடு டுபாயில் ஆரம்பம்

உலக அரசாங்க உச்சிமாநாடு ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டாவது பெரிய நகரான டுபாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த உச்சிமாநாடு ஆரம்பமாகியுள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் 140 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

காலநிலை மாற்றம், சர்வதேச அரசாட்சியின் புதுமையான முன்னேற்றம், விஞ்ஞானம் – தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்கத்தை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சரவை விவகார அமைச்சர் மொஹமட் அப்துல்லா மற்றும் உலக பொருளாதார மன்றத்தின் நிறுவுனரும், நிர்வாகத் தலைவருமான க்ளோஸ் ஷ்வாப் ஆகியோரின் உரைகளுடன் மாநாடு ஆரம்பமானது.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் 600 பேர் உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !