Main Menu

உலகில் முதன்முறை உயிருள்ள இயந்திர மனிதன்

ஆப்பிரிக்கத் தவளையின் உயிரணுக்களைக் கொண்டு உலகில் முதன் முறை உயிருள்ள இயந்திர மனிதனை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதன் பெயர் Xenobot.

ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட அந்த இயந்திரம், இளஞ்சிவப்பு நிறத்தில், தசைக் கோளம் போன்ற வித்தியாசமான வடிவில் இருக்கும். மனித உடலுக்குள் புகுந்து ஆய்வு செய்யப் பயன்படுத்த ஏதுவாக அது மிகச்சிறியது. எந்த உணவும் இல்லாமல் பல வாரங்களுக்கு அந்த இயந்திரம் தாக்குப் பிடிக்கும்.

உயிரினங்கள் வாழ்வதற்கு அவசியமான இதயமும், ஏதேனும் காயம் ஏற்பட்டால், தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றலும் Xenobot க்கு உண்டு.

நடப்பது, நீந்துவது மட்டுமல்ல, மற்ற Xenobot-களுடன் இணைந்தும் அது செயல்படும்.

அத்தகைய ஆற்றலுள்ள இயந்திரங்களைக் கொண்டு நிறையப் பணிகளை செய்யலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடல்களில் உள்ள நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களைச் சேகரிப்பது, கதிரியக்கக் கழிவைச் சுத்தம் செய்வது ஆகிய பணிகளை இயந்திர மனிதர்களால் செய்ய முடியும்.

Xenobots ஒரு புது வகைப் படைப்பு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.