உலகிலேயே மிகவும் சிறிய வீடு ஒன்றினை கட்டி சாதனை!
உலகிலேயே மிகவும் சிறிய வீடு ஒன்றினை கட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ட்ராவிஸ் காசகிராண்டே என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
மனித தலைமுடியை விடவும் சிறிய வீட்டை அவர் இதன்போது கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீட்டில் கதவுகள், ஜன்னல், நாற்காலிகள், புகைபோக்கி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கனடாவின் தேசியக் கொடியும் பறப்பது போல இந்த வீட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.