உலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் மேட் 20 X ஸ்மார்ட்போனில் 7.2 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, கிரின் 980 பிராசஸர், உலகில் முதல் முறையாக லிக்விட் மல்டி-டைமென்ஷனல் கூலிங் சிஸ்டம் வேப்பர் சேம்பர் மற்றும் கிராஃபீன் ஃபிலிம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக தரமுள்ள கேம் விளையாடும் போதும் சாதனத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் போன்றே மேட் 20 X ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா லெய்கா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புற கைரேகை சென்சார், IP53 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் என்கிரேவ் செய்யப்பட்ட கிளாஸ் பேக் பேனல் வழங்கப்பட்டுள்ளதால், கைகளில் இருந்து நழுவாமலும், கைரேகைகள் பதியாமல் இருக்கும். 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஹானர் மேட் 20 X ஸ்மார்ட்போனில் ஹூவாய் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் மேட் 20 X சிறப்பம்சங்கள்:
– 7.2 இன்ச் 2244×1080 பிக்சல் FHD+ OLED 18.7:9 DCI-P3 HDR டிஸ்ப்ளே
– ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
– 720 MHz ARM மாலி-G76MP10 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
– 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– கைரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP53)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஹூவாய் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹூவாய் மேட் 20 X ஸ்மார்ட்போன் ஃபேன்டம் சில்வர் மற்றும் மிட்நைட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 899 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.76,275 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூவாய் மேட் 20 X ஸ்மார்ட்போன் லண்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !