உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை வெற்றி!

உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் விமானத்தின சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை நிறுவனமொன்று ‘ஏர்லேண்டர்’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது.

92 மீற்றர் உயரமும், 44 மீற்றர் அகலமும் கொண்ட இந்த விமானம் கடந்த 2017-ம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டபோது விபத்தில் சிக்கியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 25 மில்லியன் யூரோ செலவில் இந்த விமானம் புனரமைக்கப்பட்டது.

மேலும் குறித்த விமானத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !