Main Menu

உலகின் மிகப்பெரிய சவால்களை நாங்கள் ஒன்றாகச் சமாளிப்போம் – ஜஸ்டின் ட்ரூடோ

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், பிளவுபட்ட தேசத்தில் பொருளாதாரத்தை சரிசெய்வதற்கும் வாக்குறுதியை வழங்கியமையினால் ஜனநாயகக் கட்சி வ வேட்பாளர் ஜோ பிடன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று மாலை ஜோ பிடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது வெற்றிக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவும் துணைத் ஜனாதிபதியாகவும் தெரிவாகியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி பிடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் அவர்களின் நிர்வாகம் மற்றும் அமெரிக்க காங்கிரஸுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய சவால்களை நாங்கள் ஒன்றாகச் சமாளிப்போம் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.