உலகின் சிறந்த இராணுவ வீரர்கள் பட்டியலில், இவர்கள் சேர்ந்து கொள்கின்றார்கள்
Burkina Faso இல் இடம்பெற்ற பயங்கரவாததுக்கு எதிரான நடவடிக்கையில் உயிரிழந்த இரண்டு இராணுவ வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று பரிசில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரதமர் எத்துவா பிலிப், இராணுவ அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Invalides க்கு வருகை தந்தார். மெளன அஞ்சலி நிகழ்வோடு தேசிய கீதமான Marseillaise பாடலும் ஒலித்தது. இரண்டு இராணுவ வீரர்களின் உடலங்களும் தேசிய கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக வைக்க
ப் பட்டிருந்தது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரும் அழைக்கப்பட்டு அவர்களும் வருகை தந்திருந்தனர்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகியோர் நீண்ட நிமிடங்களாக இராணுவ வீரரின் குடும்பத்தினரோடு உரையாடினார்கள். பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உரையாற்றும் போது, ‘இரண்டு இராணுவ வீரர்களும் ஹீரோக்களாக உயிரிந்துள்ளனர்!’ என குறிப்பிட்டார். தவிர, ‘உலகின் சிறந்த இராணுவ வீரர்கள் பட்டியலில், இவர்கள் தவிர்க்கமுடியாமல் சேர்ந்துகொள்கின்றார்கள்!’ எனவும் குறிப்பிட்டார்.
தொடர்பு பட்ட செய்தி
பணயக்கைதிகளை மீட்க உயிர்கொடுத்த பிரெஞ்சு வீரர்கள்
கடந்த 9ம் திகதி, புர்க்கினா பாசோவில் (Burkina Faso) பணயக்கைதிகளை மீட்கும் பணியில் இரண்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மக்களை மீட்க உயிர் தந்த, Cédric de Pierrepont மற்றும் Alain Bertoncello ஆகியோரின் வித்துடல்கள் இன்று திங்கட்கிழமை, இராணுவ மரியாதையுடன் பிரான்சிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவர்களிற்கான தேசிய வணக்க நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என இராணுவ அமைச்சர் புளொரோன்ஸ் பார்லி (Florence Parly) தெரிவித்துள்ளார்.