உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 12கோடியை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12கோடியை கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட்-19 தொற்றினால் 12கோடியே நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 26இலட்சத்து 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை ஒன்பது கோடியே 69இலட்சத்து 72ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.