Main Menu

உலகளவில் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.

மொத்தமாக இதுவரை உலகளவில் வைரஸ் தொற்றினால், ஏழு கோடியே 26இலட்சத்து 46ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் 16இலட்சத்து 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக முதல்நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.