உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப் பட்டோரின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம்

4வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.

கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவீதத்தால் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 11 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்க ப்பட்டுள்ள நினைவு தூபியில் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !