உலகக் கிண்ண தொடருக்கான ஆஸி அணியில் ஸ்மித் இடம்பிடிப்பதில் பின்னடைவு!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா அணிக்கு பல வெற்றிகளுக்கு துணைநின்ற ஸ்டீவ் ஸ்மித்திற்கு, பந்தை சேதப்படுத்த உடந்தையாக இருந்த காரணத்திற்காக, சர்வதேச போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், தடைக்காலத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வருகிறார். அவர் தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடி வந்தார்.

இந்நிலையில் இத்தொடரின் போது, ஸ்டீவ் ஸ்மித்துக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.

அத்தோடு, அவரது காயத்துக்கு நாளை சத்திரசிக்சை செய்து கொள்ள இருக்கிறார். இதனால் அவர் குறைந்தது 6 வார காலம் ஓய்வில் இருக்க வேண்டும். அத்தோடு, கிரிக்கெட் விளையாடவும் முடியாது.

எனவே, உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக நடைபெறும், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரிலும் ஸ்மித், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் பங்கேற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !