உலகக் கிண்ண கிரிக்கெட் அணி தலைவர்களுக்கும் எலிசபெத் மகாராணிக்கும் இடையில் சந்திப்பு
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொள்ளும் 10 அணிகளின் தலைவர்கள் மற்றும் பிரிட்டனின் 2ஆவது எலிசபெத் மகாராணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் ஆரம்ப வைபவம் பக்கிங் ஹாம் மாளிகைக்கு அருகாமையில் நடைபெற்றது. சிறுவர்களின் கல்விக்க்காக போராடும் பாகிஸ்தானின் சிறுவர் வீரர்கள் மற்றும் ஜக்கிய நாடுகளின் சபையின் இளம் சமாதான தூதுவரான மலாலா யுசுவ்சாயி கலந்துக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஆரம்ப வைபவத்தில் விவியன் ரிஜட் வோஸ் மகேல ஜயவர்த்தன அனில் கும்பே ஹசார் அலி உள்ளிட்ட முன்னணி கிரிட்கெட் வீரர்கள் கலந்துக்கொண்டனர். ஆரம்ப வைபவத்தின் போது இம்முறை உலகக்கிண்ண போட்டியில் கலந்துக்டகொண்டுள்ள அனைத்து நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் கிரிட்கெட் வீரர் ஒருவர் மற்றும் அவருடன் இணைந்து 60 நிமிடங்களுக்கான போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்து வெற்றிப்பெற்றது. 60 நிமிடங்களில் இவர்கள் பெற்றுள்ள ஒட்ட எண்ணிக்கை 74 ஆகும். இலங்கை அணி 43 ஒட்டங்களை பெற்றது. அணிக்கு 6ஆவது இடம் பெற்றது.