உலககோப்பை ஹாக்கி போட்டி – மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டிம் ஹெர்ஸ்புருச் முத்ல் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து 14 மற்றும் 18வது நிமிடத்தில் மற்றொரு வீரரான கிறிஸ்டோபர் ருர் தலா ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் மலேசிய வீரர் ரஸி ரஹிம் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து மற்றொரு வீரரான
நபில் நூர் 28வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் ஜெர்மனி வீரர் மார்கோ மில்டாகு 39-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அப்போது ஜெர்மனி 4 – 2  என முன்னிலை வகித்தது. அடுத்த சில நிமிடங்களில் மலேசிய வீரர் ரஸி ரஹிம் ஒரு கோல் அடித்தார். 59-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டிம் ஹெர்ஸ்புருச் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், ஜெர்மனி அணி மலேசியாவை 5 – 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஜெர்மனி அணி காலிறுதிக்குள் நுழைந்தது. ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் ருர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !