உறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு! – ஜூலை 1 முதல் கட்டாயம்!

நீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது.
பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 90 கிலோமீட்டர்கள் இருந்தது. இந்நிலையில் இந்த வேகத்தினை மணிக்கு 80 கிலோமீட்டர்களாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே இது அரச தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு தரப்பினரின் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிகையினல் இந்த முடிவு பிற்போடப்பட்டிருந்தது. கடந்த மாதம் இந்த வேகப்பட்டுப்பாடு செயற்படுத்தப்பட்டிருந்த போது வீதி விபத்துக்களும், விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்புக்களும் கணிசமாக குறைந்திருந்தன.
இந்நிலையில், வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் கட்டாயமாட்டப்பட உள்ளது. பிரதமர் எத்துவாபிலிப் தெரிவிக்கும் போது, ‘பிரபலத்தன்மையை இழக்க நான் தயார். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டினால் வருடத்துக்கு 300 இல் இருந்து 400 உயிர்கள் பாதுகாக்கப்படும்!’ என தெரிவித்துள்ளார். மொத்தமாக 400,000 கிலோமீட்டர்களுக்கு இந்த புதிய வேகக்கட்டுப்பாடு நடைமுறைக்கு வர உள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !